வடகாடு ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் மாவட்ட கலெக்டருக்கு கடிதம்
                மாவட்ட கலெக்டர் கவிதாராமுவுக்கு வடகாடு ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-         வடகாடு ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் இயற்றப்பட்ட வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் பொது வினியோக திட்டத்தில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதால் பொருட்கள் வினியோகிப்பதில் காலதாமதம் ஏற்படுவதை சரி செய்யவும், எஸ்.பி.எம். பேஸ்-2 திட்டத்தை உடனே தொடங்கி புதிய கழிவறைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும், அரசு வீடு வழங்கும் திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்ப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கிராமசபை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments