ஊதிய உயர்வு வழங்காவிட்டால் புதுக்கோட்டை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு
        புதுக்கோட்டை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபாஷ் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளிக்கு முன் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தவும், வேலை நிறுத்தம் அறிவிக்க மாநிலக்குழுவுக்கு அதிகாரம் அளித்தல் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments