கட்டட வரைபட அனுமதிக்கு லஞ்சம் - கையும் களவுமாக பிடிபட்ட பெண் ஊராட்சி தலைவர் கணவருடன் கைது!!




கோவை ஜி.என்.மில்ஸ் அருகேயுள்ள சுப்ரமணியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ஆட்டோ மொபைல் ஓர்க் ஷாப் உரிமையாளர். இவர் மனைவி பூர்ணிமா என்பவர் பெயரில் பெரியநாயக் கன்பாளையம் ஊராட் இக் குட்பட்ட பிளிச்சி பஞ்சாயத்தில் உள்ள கோட்டைப்பிரிவு வேலன் நகரில் இரண்டு வீட்டு மனையிடம் வாங்கினார். இந்த மனையிடத்தில் வீட கட்ட கார்த்திக் திட்டமிட்டார். வங்கி கடன் மூலமாக வீடு கட்ட அவர் முடிவு செய்திருந்தார். இதற்காக கட்டிட வரைபட அனுமதி கேட்டு பிளிச்சி பஞ்சாயத்தில் விண்ணப்பம் கொடுத்தார்.அப்போது பிளிச்சி பஞ்சாயத்தில் இரு மனைகளுக்கும் சேர்த்து கட்டிட வரைவு அனுமதி கட்ட ணம் 21092 ரூபாய் என தெரிவிக்கப்பட்டது. 

இந்தகட்டணங்களை கார்த்திக் முறையாக செலுத்தி விட்டார். ஆனால் இவருக்கு கட்டிட வரைவு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் கார்த்திக் பிளிச்சி பஞ்சாயத்து அலுவலகம் சென்று விசாரித்தார்.அப்போது அங்கே இருந்த பிளிச்சி பஞ்சா யத்து தலைவர் சாவித்திரி என்பவர் பக்கத்தில் இருந்த தனது கணவர் ராஜன் என்பவரை சந்தித்து பேசி கட்டிட வரைவு அனும நியை கேட்டேன்.

ஆனால் அவர் வரைவு அனுமதி வழங்க தனக்கு 20 ஆயிரம் ரூபாய்  வேண்டும். நீங்கள் இரண்டு இடத்தில் வீடு கட்டபோகி நீர்கள் ஒரு மனைக்கு 10ஆயிரம் ரூபாய் என 20 ஆயி ரம் ரூபாய் தந்தால் தான் அனுமதி உத்தரவு வழங்க முடியும் என கூறியதாக தெரிகிறது.
இதை கேட்ட கார்த்திக் நாள் உரிய கட்டணம் செலுத்தி விட்டேன் எதற்கு பணம் தர வேண்டும் என கேட்டார். அப்போது அவர் எங்களுக்கு பணம் தந்தால்தான் அனுமதி உத்தரவு வழங்க முடியும் என கறாராக கூறி விட்டார் தான் அதிக தொகை தர முடியாது என அவர் கூறிய போது 15 ஆயிரம் ரூபாய் தந்தால் அனுமதி உத்தரவு தருவதாக கூறினார் கார்த்திக் பணம் வாங்கி வருகிறேன் என கூறி விட்டுலஞ்ச ஓழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் பிளிச்சி பஞ்சாயத்து அலுவலத்தில்  ரசாயன மை தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து கார்த்திக்கை அனுப்பிவைத்தனர்.கார்த்திக் அங்கே சென்று அலுவலகத்தில் இருந்த ராஜ னிடம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

அப்போது போலீசார் சுற்றி வளைத்து ராஜனை மடக்கி பிடித்தனர். அவர் பணம் வாங்கியபோது பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி அங்கேயிருந்துள்ளார். போலீசார் ராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட வரைவு அனுமதி வழங்குவதில் இவர்கள் பலரிடம் அதிக தொகை லஞ்சமாக வாங்கியிருப்பதாக தெரிகிறது. சாவித்திரி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள சொத்து பிளிச்சியில் நடத்த திட்ட பணிகள் டெண்டர் விட்ட பணிகள் மற்றும் பல்வேறு நிர்வாக பணிகளில் பணம் பெறப்பட்டதா? லஞ்ச தொகையில் சொத் துக்கள் வாங்கிகுவித்தார்க ளா? என விசாரித்து வரு கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments