அன்னவாசல் அருகே மின்கம்பத்தில் மோதி வேன் கவிழ்ந்தது
மணப்பாறை அருகே உள்ள ஆலத்தூரில் இயங்கி வரும் ஒரு தனியார் கம்பெனிக்கு பணியாளர்களை ஏற்றி செல்வதற்காக நேற்று அதிகாலை வேன் ஒன்று முக்கண்ணாமலைப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பிராம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (வயது 28) என்பவர் ஓட்டினார். முக்கண்ணாமலைப்பட்டி சக்கரான்குளக்கரையில் வந்தபோது மழை பெய்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சென்று மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

 இதில் மின்கம்பம் 3 துண்டுகளாக உடைந்தது. இதனால் மின் கம்பிகள் ஒன்றோடொன்று உரசி தீப்பொறி கொட்டியது. பின்னர் வேனில் சிக்கிய டிரைவர் பிரகாஷ் கண்ணாடி வழியாக காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக வெளியே வந்தார். இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உதவியுடன் வேன் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments