சென்னை முதல் கூடூர் வரையில் 130 கி.மீ வேகத்தில் பறக்கப்போகும் 86 விரைவு ரயில்கள்




சென்னை முதல் கூடூர் வரையில் 130 கி.மீ வேகத்தில் பறக்கப்போகும் 86 விரைவு ரயில்கள்

130 கி.மீ வேகத்தில் கடந்து சென்ற ஜன் சதாப்தி விரைவு ரயில் சென்னை: சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

அதிக பயணிகள் பயணம் செய்யும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் வேகத்தை அதிகரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதன்படி சென்னை - கூடூர் வழித்தடத்தில் அனுமதி அளிக்கப்பட்ட உட்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான சோதனை ஓட்டம் கடந்த அக்.6-ம் தேதி நடைபெற்றது. இந்தச் சோதனை ஓட்டத்தில் அதிகபட்சமாக 143 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இதன்படி 134 கிலோ மீட்டர் தூரத்தை 84 நிமிடத்தில் ரயில் கடந்து சென்றது.





இந்நிலையில், சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, முதல் ரயிலாக சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ஜன் சதாப்தி விரைவு ரயில் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், குறித்த நேரத்தில் இயக்க சாதகமாக இருக்கும் என தெற்கு ரயில்வே நம்பிக்கை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments