முத்துக்குடா பகுதியில் 82 கடல் அட்டைகள் பறிமுதல்; இளைஞா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகேயுள்ள முத்துக்குடா பகுதியில் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட 82 கடல் அட்டைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே முத்துக்குடா பகுதியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்பட இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அறந்தாங்கி வனச் சரக அலுவலா் மேகலா தலைமையிலான வனத்துறையினா் திங்கள்கிழமை முத்துக்குடா பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தனது இரு சக்கர வாகனத்தில் 82 கடல்அட்டைகளைக் கொண்டு வந்த ராமச்சந்திரன் (24) என்பவரைக் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த அட்டைகளையும் பறிமுதல் செய்தனா்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments