வீட்டு வேலைக்குச் சென்று குவைத்தில் பரிதவித்த பெண் - பத்திரமாக மீட்ட தமிழ் அமைப்பு
குவைத்தில் பரிதவித்த பெண்ணை மீட்ட தமிழக அமைப்பு அவரை தாயகம் அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னை தண்டையார் பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்த புவனா என்ற பெண் வீட்டு வேலைக்காக குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், அவரை சித்ரவதை செய்யும் வீடியோ வைரலானது. இதையடுத்து அந்த பெண்ணை அலாவுதீன் என்பவர் மீட்டு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் பாதுகாப்பில் விட்டுள்ளார்.


இதையடுத்து பத்து நாட்களாக அங்கிருந்த பெண் பணிபுரிந்த வீட்டு முதலாளியிடம் பேசி பாஸ்போர்ட் பெற்று எவ்வித வழக்கும் இன்றி சங்கத்தின் மருத்துவ சேவை அணி செயலாளர் ஜான் ரமேஷ் அவர்களால் கிருஸ்தவ ஆலயம் மூலம் விமான டிக்கெட் பெற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த பெண் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இதையடுத்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்க தலைவர் அப்துல் மஜீத் முயற்சியால் பாதிக்கப்பட்ட புவனா என்ற பெண் இந்தியா வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments