கறம்பக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் திருட்டு

கறம்பக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் திருட்டு

கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதி சலீம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). இவரது தாய் ராஜாம்மாள் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதையடுத்து செந்தில்குமார் அவரது குடும்பத்தினருடன் சொந்த கிராமமான வாணக்கன்காட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் முன் பக்க இரும்பு கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், வெள்ளி விளக்கு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து செந்தில்குமார் மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் கைரேகை பதிவு செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments