தொண்டி அருகே காரங்காட்டில் வெளிநாட்டு பறவைகள் வருகை




காரங்காட்டிற்கு வெளிநாட்டு பறவைகள் வர துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம், என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தொண்டி அருகே காரங்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நில அலையாத்தி காடுகள், இனிமையான படகு சவாரி, கடல் வாழ் உயிரினங்களை காணும் வசதி என காரங்காடு சுற்றுலா அனைவரையும் கவர்ந்துள்ளது. ராமநாதபுரம் வனச்சரகம் சார்பில் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் 3 கி.மீ., வரை சென்று சதுப்பு நில காடுகள், கடற்புற்கள் மற்றும் கடல்வாழ் அரிய உயிரிங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை சார்பில் குஜராத்தில் இருந்து 6 பைபர் துடுப்பு படகுகள் பயன்பாட்டிற்கு உள்ளன. இது குறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், அக்., கடைசி முதல் பிப்., வரை வெளி நாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரத்துவங்கும். படகுகளில் செல்லும் போது காடுகளில் கும்பலாக அமர்ந்திருப்பதை பார்த்து ரசிக்கலாம்.

தீபாவளி நெருங்குவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் சைவ, அசைவ உணவுகளை முன்கூட்டியே ஆர்டர் கொடுப்பதன் மூலம் சுவையாக சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments