சைக்கிளில் லடாக் சென்றடைந்த அதிரை இளைஞர்கள்! ஒருவர் மட்டும் நேபாளம் செல்ல திட்டம்!
        அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது (25) மற்றும் முகம்மது ஃபாய்ஸ் (18) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் செல்வதற்கான தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர்.
செல்கின்ற வழிகளில் அப்பகுதி மக்களின் கலாச்சாரம், மக்களின் பழக்கவழக்கங்கள் குறித்தும் தெரிந்துக்கொண்ட இவர்கள், 55 நாட்களில் சுமார் 3ஆயிரத்து 500 கிலோ மீட்டரை கடந்து லடாக் யூனியன் பிரதேசத்தை அடைந்துள்ளனர்.இந்நிலையில், முகம்மது ஃபாய்ஸ் மட்டும் வேறொரு குழுவினருடன் இணைந்து நேபாளம் செல்ல இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி அப்துல் ஹமீது மீண்டும் அதிரை திரும்புகிறார். மிகவும் இளம் வயதில் சவால் மிகுந்த சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கும் அப்துல் ஹமீது மற்றும் முகம்மது ஃபாய்ஸ் ஆகியோருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments