அன்னவாசல் அருகே அரசு பள்ளியில் மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றிய பயிற்சி




அன்னவாசல் அருகே மாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றிய பயிற்சி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார்.             இதில் ஆசிரியர் முகமதுஆஸீம் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களில் 50 மாணவர்களை தேர்வு செய்து மாணவர்களின் விருப்பத்தின் பேரில் முதற்கட்டமாக இலுப்பை மற்றும் புங்கை விதைகள் மூலம் பதியம் செய்து மரக்கன்றுகளை உருவாக்கும் பயிற்சியை அளித்தார்.

         பின்னர் ஒவ்வொரு மாணவருக்கும் கொடுக்கப்பட்ட செம்மண் நிரப்பப்பட்ட பைகளில் உள்ள விதைகளை வீடுகளில் வைத்து மரக்கன்றுகளை உருவாக்க வேண்டும் எனவும் இலுப்பை மற்றும் புங்கை மரக்கன்றுகளை உருவாக்கி வீட்டுதோட்டம், தோப்பு, வயல்வெளி மற்றும் பொது இடங்களில் நட்டுக் கொள்ளலாம். அத்துடன் இலுப்பை மற்றும் புங்கை மரக்கன்றுகளை உருவாக்கும் மாணவர்களுக்கு மா, பலா, வாழை, கொய்யா, தென்னை மற்றும் பிற பயனுள்ள மரக்கன்றுகள் வழங்கப்படுவதாக கூறினர். பின்னர் விதைகள் மூலம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments