பி.டி பீரியடை கடன் வாங்க சொல்லாதீங்க.. திருச்சி கலெக்டரிடம் சொல்லும் மாணவன்.. பரவும் வீடியோ!
திருச்சியில் நடந்த மாநில கல்வி கொள்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் விளையாட்டு பீரியடை கடன் வாங்கி பாடம் எடுக்க வேண்டாம் என்று மாணவன் ஒருவர் திருச்சி கலெக்டரிடம் பேசும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

மாநில கல்வி கொள்கை ஏற்படுத்துவதற்காக, தமிழக அரசு உத்தரவின்படி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழு மாநில கல்வி கொள்கை தொடர்பாக மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.

கருத்து கேட்பு கூட்டம்

அந்த வகையில், திருச்சி மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கல்வி அதிகாரிகள்

இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உயர்கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

மாவட்ட கல்வி அதிகாரிகள்

இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உயர்கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

பரவும் வீடியோ

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள், 'அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சத்துணவு திட்டம் தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். பள்ளி மாணவன் PET - பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டரிடமே கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

90, 80 கிட்ஸ்கள் கருத்து

இந்த பிரச்சினை இப்போது இல்லை.. நாங்க படிக்கும் போதே இருந்தது என 90, 80 கிட்ஸ்கள் கூட இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற கலந்துரையாடல் எல்லாம் அப்போது மிக குறைவாகத்தான் இருந்தது எனவும் ஆதங்கப்பட்டு கொண்டனர். அதேபோல், சூப்பர் டா தம்பி.. செம டா தம்பி... போன்ற கருத்துக்களும் மாணவின் கோரிக்கை குறித்த வீடியோவுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments