மதுரை - சென்னை தேஜஸ் வேகத்தை நெருங்கியது வைகை புயல்
மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் முதன் முறையாக மதுரையில் இருந்து சென்னைக்கு 6.34 மணி நேரத்தில் கடந்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 46 நிமிடங்களுக்கு முன் சென்று சாதனை படைத்தது.
மதுரை மக்களின் அபிமான ரயில் வைகை எக்ஸ்பிரஸ். 1977 ஆக., 15 முதல் மதுரை - சென்னை இடையே இயக்கப்படுகிறது. பகல்நேர ரயிலான வைகை தினமும் காலை 7:10 மணிக்கு மதுரையில் புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு சென்னை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 20 நிமிடங்கள்.ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்றுமுன்தினம் (அக்., 15) காலை 7:40 மணிக்கு தாமதமாக புறப்பட்டது. இருப்பினும் சென்னைக்கு மதியம் 2:30 மணிக்கு பதிலாக 2:14 மணிக்கே சென்றடைந்தது.


இவ்வகையில் மதுரை - சென்னைஇடையே உள்ள 497 கி.மீ., துாரத்தை 6 மணி நேரம்
34 நிமிடங்களில் கடந்துள்ளது. 46 நிமிடங்கள் முன்கூட்டியே சென்று சாதித்துள்ளது.இதன் மூலம் தேஜஸ் ரயிலின் வேகத்திற்கு இணையாக இயக்கப்பட்டுள்ளது. அதாவது மதுரை - சென்னை தேஜஸ் ரயில் 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்னை செல்கிறது. இதற்கு நிறுத்தங்கள் மிக குறைவு. 15 பெட்டிகள் மட்டுமே.


ஆனால் வைகை எக்ஸ்பிரஸூக்கு 11 நிறுத்தங்களுடன் 22 பெட்டிகளும் உள்ளன. இதை

ஒப்பிட்டால் தேஜஸ் ரயிலுக்கு இணையான வேகத்தில் சென்னை சென்றுள்ளது பெரும்

சாதனையே. மதுரை ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் கூறுகையில், " 44 ஆண்டுகளில் கடந்த மார்ச் 3 ல் 6 மணிநேரம் 40 நிமிடங்களில் சென்னை சென்று லோகோ பைலட் ரவிசங்கர் சாதனை படைத்தார். தற்போது அவரே அவரது சாதனையை முறியடித்துள்ளார்" என்றார்.

லோகோ பைலட் ரவிசங்கர் கூறுகையில், "இந்த ரயிலை 110 கி.மீ., வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது. அதை மீறாமல் கால அட்டவணைப் படி ஓட்டுவது எங்களுக்கு சவாலாக இருக்கும். சில நொடிகள் தாமதித்தாலும் அதை சரிக்கட்டுவது கடினம். அக்.,15ல் மதுரையில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக சென்றேன். இருப்பினும் விழுப்புரம் செல்ல 9 நிமிடங்களே தாமதமானது. அதன்பின் 6 நிறுத்தங்களை லோகோ பைலட் பாண்டியன் உதவியுடன் கடந்தேன். இது மறக்க முடியாத தருணம், ''என்றார்.
உதவி பைலட் முத்துக்குமார் கூறுகையில், " ரயில் பாதையில் எங்கு வளைவு, சிக்னல், மேடு, பள்ளங்கள் உள்ளன எனப்பார்த்து ரயிலை சீரான வேகத்தில் இயக்க நுட்பம் வேண்டும்.
இத்துடன் மேலாளர் குமார், ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இது சாத்தியமானது" என்றார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments