மலேசியாவில் தவிக்கும் மனைவியை மீட்டு தரக்கோரி மாவட்டமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கணவர் மனு 
புதுக்கோட்டை மாவட்டமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங்குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரஜினிகாந்த் (வயது 40) என்பவர் தனது மனைவி வெண்ணிலாவை (37) மலேசியாவுக்கு ஒரு ஏஜெண்ட் அனுப்பி வைத்ததாகவும், அங்கு அவர் துன்புறுத்தப்படுவதாகவும், அவரை மீட்டுத்தரக்கோரி மனு அளித்தார். இதேபோல கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 292 மனுக்கள் பெறப்பட்டன. 

மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் மலேசியாவில் உள்ள தனது மனைவி வெண்ணிலாவை மீட்டு தருமாறு கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments