தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத் - தஞ்சாவூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத் - தஞ்சாவூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது 




தீபாவளி பண்டிகையை ஒட்டி செகந்திராபாத்- தஞ்சாவூர் இடையே குண்டூர், தெனாலி, நெல்லூர்,கூடுர்,  சென்னை எழும்பூர், தாம்பரம் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் பாபநாசம் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.


வண்டி எண் 07685 செகந்திராபாத் - தஞ்சாவூர்

வண்டி எண் 07685 செகந்திராபாத்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் (சனிக்கிழமை)  இரவு 8.25 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்பட்டு நால்கொண்டா, குண்டூர், தெனாலி, சென்னை எழும்பூர் (ஞாயிறு காலை 10.15) ,  திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை,  வழியாக மறுநாள் ஞாயிற்று கிழமை மாலை 5.10 மணிக்கு  கும்பகோணம், 5.24 மணிக்கு   பாபநாசம்  வந்து தஞ்சாவூருக்கு இரவு 7.00 மணிக்கு சென்றடையும். 

வண்டி எண் 07686 தஞ்சாவூர் - செகந்திராபாத் 

மறு மார்கத்தில் வண்டி எண் 07686 தஞ்சாவூரிலிருந்து அக்டோபர் 24 மற்றும் 31ம் தேதி (திங்கட்கிழமை)  காலை 7.00 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் (7.19 AM ) கும்பகோணம் (7.48 AM ) சென்னை எழும்பூர் (பகல் 2.00 மணி) வந்து செவ்வாய்க்கிழமை காலை  6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றையும்.

வண்டி எண்: 07685/86 முன்பு செகந்திராபாத் - ராமேஸ்வரம் வரை இயங்கி வந்த சிறப்பு இரயில் மீண்டும் தஞ்சை வரை இரு சேவைகளுக்கு மட்டும் இயங்க உள்ளது. 

அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் செகந்திராபாத் - தஞ்சை இடையேவும். அதே போல அக்டோபர் 24 மற்றும் 31 இடையே தஞ்சை - செகந்திராபாத்  இடையே இயங்க உள்ளது. அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்

நன்றி : Kumbakonam Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments