சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஒரு பிளாட்பாரத்தில் 2 ஃபேன்கள் மட்டுமே இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.




சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஒரு பிளாட்பாரத்தில் 2 ஃபேன்கள் மட்டுமே இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் தெற்கு ரயில்வே சார்பில் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்று தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஒரு பிளாட்பாரத்தில் 2 ஃபேன்கள் (மின்விசிறிகள்) மட்டுமே இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான மனுவிற்கு பதில் அளித்துள்ள தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அளித்துள்ள பதிலில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாராத்தில் ஒரு ஃபேனும், 6-வது பிளாட்பாராத்தில் ஒரு ஃபேனும், 7வது பிளாட்பாராத்தில் 2 ஃபேன்களும், 8-வது பிளாட்பாராத்தில் 2 ஃபேன்களும், 9-வது பிளாட்பாராத்தில் 2 ஃபேன்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மீட்டர் நீளம் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பிளாட்பாராத்தில் இரண்டு இடத்தில் மட்டுமே ஃபேன்கள் இருப்பது என்று தெற்கு ரயில்வே அதிர்ச்சி அளிக்கும் பதிலை அளித்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments