புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லா மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க அறிவுரை





    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிசெல்லா, இடைநின்ற குழந்தைகளை, தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிந்திட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பல்வேறு துறையினருடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டா் கவிதாராமு தலைமை தாங்கி பேசுகையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 6 வயது முதல் 18 வயது வரையிலான அனைத்து மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2025-ம் ஆண்டிற்குள் அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் எண்ணறிவும், எழுத்தறிவும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிசெல்லா, இடைநின்ற குழந்தைகளாக இதுவரை 482 மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகள் பள்ளி செல்லா காரணத்தை கண்டறிந்து, அவர்கள் பள்ளி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவும், தொடர்ந்து அவர்கள் பள்ளி செல்வதை உறுதி செய்யவும், உளவியல் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கவும் தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி செல்லா மாணவ, மாணவிகள் அனைவரையும் 100 சதவீதம் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதற்கு தொடர்புடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments