அகஸ்தியம்பள்ளி- திருத்துறைப்பூண்டி இடையே 22-ந்தேதி அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மேம்படுத்தப்பட்ட அகலப்பாதை பிரிவில், அதிவேக சோதனை ஓட்டத்துக்கான கள ஆய்வு வருகிற 22-ந்தேதி பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அபய் குமார் ராய் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே மதியம் 1 மணி - 5 மணி வரை அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

எனவே அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையங்ளுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளங்களை இந்த குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அணுகவோ, அத்துமீறி நுழையவோ கூடாது என்று தெற்கு ரெயில்வே சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments