அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும்  சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கு நடைபெற்று வருகிறது
அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று 21 10 2022 காலை 8 மணி முதல் ஆரம்பமானது . தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை- இராமேஸ்வரம் இடையே  செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி  காரைக்குடி மானாமதுரை இராமநாதபுரம்  வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

வண்டி எண் 06041 சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் 

வண்டி எண் 06041 சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு  மறுநாள் திங்கட்கிழமை  காலை 11.00 மணிக்கு   இராமேஸ்வரம் சென்றடையும். 

திருவாரூர் டு காரைக்குடி  ஊர்களின் அட்டவணைகள்

திருவாரூர்(03.30AM), திருத்துறைப்பூண்டி(04.10AM), அதிராம்பட்டினம் (04.47 AM),
பட்டுக்கோட்டை (05.05 AM), 
பேராவூரணி (05.25 AM),
அறந்தாங்கி (05.40 AM), 
காரைக்குடி (06.45 AM) 

வண்டி எண் 06042  இராமேஸ்வரம்  - தாம்பரம் 

வண்டி எண் 06042  இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் அக்டோபர் 24 திங்கட்கிழமை மாலை 4.25 மணிக்கு இராமேஸ்வரத்தில் புறப்பட்டு  மறுநாள் செவ்வாய்க்கிழமை  காலை 06.20 மணிக்கு   சென்னை தாம்பரம் சென்றடையும்

காரைக்குடி டு திருவாரூர்  ஊர்களின் அட்டவணைகள் 

காரைக்குடி (07.45 PM), 
அறந்தாங்கி (08.15 PM), 
பேராவூரணி (08.40 PM),
பட்டுக்கோட்டை(09.07PM), அதிராம்பட்டினம்(09.23PM),  திருத்துறைப்பூண்டி  (10.00 PM),
திருவாரூர் (10.50 PM),

டிக்கெட் விரைவில் தீர்ந்து விடும் என்பதால் அதில் பயணிக்க தேவையுடைய காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார 
மக்கள் விரைவாக தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .மக்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments