சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது.
சித்தன்னவாசல் சுற்றுலா தலம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலா தலத்தின் பூங்கா, படகு சவாரி அமைந்துள்ள இடம் உள்ளிட்ட பகுதிகள் தமிழக சுற்றுலாத்துறையின் சார்பிலும், குடவரைக் கோவில் சமணர் படுகை அமைந்துள்ள இடம் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்த சுற்றுலாத்தலத்தை பார்வையிட வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் சித்தன்னவாசலில் உள்ள மலைப்பகுதி பூங்கா உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை அதிகமாக குவிய தொடங்கியது. இதனால் சுற்றுச்சூழலும், மண் வளமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது.
அபராதம் விதிக்கப்படும்
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலர் ஹர் சகாய் மீனா சித்தன்னவாசலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொன்மை சின்னங்களின் அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி கழிவுகளை அப்புறப்படுத்திட உரிய ஏற்பாடுகளை செய்திட அறிவுறுத்தினார்.
இந்நிலையில் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
வாகனங்களில் சோதனை
சுற்றுலா தலத்தின் எந்த ஒரு பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சித்தன்னவாசல் ஊராட்சி முழுமையுமே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தின் குடவரைக் கோவில் உள்ளிட்ட ஒரு பகுதி மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் இதுகுறித்து அவர்களுக்கும் கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் அறிவிப்பு செய்துள்ளார்.
இதனையொட்டி சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறா என நுழைவு வாயிலில் சோதனை செய்யப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.