அதிராம்பட்டினத்தில் கை குழந்தையுடன் வழி அறியாமல் தவித்த பெண்ணுக்கு உதவிய அதிரை சகோதரர்கள்பச்சிளங்குழந்தையோடு பரிதவித்த பெண்ணை அதிரை கவுன்சிலர் மீட்டார்.

இன்று அதிகாலையில் எஸ்பி பட்டினத்தை சேர்ந்த பெண்மணி பிறந்த கை குழந்தையுடன் வழி அறியாமல் அதிராம்பட்டினத்திற்கு வந்துள்ளார் மனநிலை பாதிக்கப்பட்ட அப்பெண்மணி தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு அறியாமல் திகைத்து போய் அதிரையின் சில பகுதிகளில் சுற்றி வழி அறியாமல் சுற்றி திரிந்துள்ளார். 

அந்த வழியாக வந்த அதிரை 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மற்றும் கடற்கரைதெரு துணை தலைவர் அப்துல் மாலிக் விசாரிக்கும் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தந்துள்ளார். விசாரித்தவகையில் எஸ்.பி.பட்டினம் என்று மட்டுமே கூறியுள்ளார்.

அதை வைத்து தொண்டியை சேர்ந்த  சகோதரர்  மமக மாவட்ட செயலாளர் அட்வகேட் முஹம்மது ஜிஃப்ரி  அவர்களுக்கு   தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த ஊரை சேர்ந்த பெண்மணிதான் என்று உறுதிபட தெரியவந்தது. 

அந்த பெண்ணுடைய குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பெண்ணுடைய  தகப்பனார் அதிரைக்கு விரைந்து  வந்துள்ளார்.


இருவரையும்  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று காவல்
ஆய்வாளர்களுடன் விஷயத்தை எடுத்துரைத்த அதிரை 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் 
அவர்கள் இருவரையும் ஊருக்கு அனுப்பி வைப்பது என்பது என்று முடிவு செய்யப்பட்டு . 

 சமூக ஆர்வலர் அதிரை  சகோதரர் அட்மின் ரஜபு மைதீன் மற்றும் அப்துல் ரகுமான் அவருடைய நண்பர்  இவர்களுடைய உதவியோடு 
அதிரையின் இன்னும் சில நல்ல உள்ளங்களால் சிறிய தொகை கொடுக்கப்பட்டு பேருந்து நிலையம் அழைத்து சென்று அந்தப் பெண்மணி மற்றும் அவருடைய குழந்தையோடு அந்த பெண்மணியின் தந்தையுடன் ஒப்படைத்து ஊருக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.

யார் என்னவென்றே தெரியாத ஒரு பெண் கைகுழந்தையோடு பரிதவித்ததை கண்டு தன் சகோதரியை போல் துடித்து உடன் நடவடிக்கை எடுத்து உரியோரிடம் சேர்த்த அதிரையை சேர்ந்த தன்னார்வலர்களை உங்களோடு சேர்ந்து gpm- மீடியாவும் வாழ்த்துகிறது.

நன்றி: அதிரை உபயா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments