மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
மணமேல்குடி ஒன்றியத்தில்  பள்ளி செல்லா குழந்தைகள் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தலின்படியும் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதல்படியும் மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் இன்று ஜெகதாப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில்  சுகுந்தன் என்ற மாணவனை ஒன்பதாம் வகுப்பிலும், மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சந்தோஷ் என்ற மாணவரையும்  12 ம் வகுப்பில் மீண்டும் சேர்க்கப்பட்டது.

இக்களப்பணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு கணேசன் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு  திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலுச்சாமி  அங்கை யற்கண்ணி இயன் முறை மருத்துவர் திரு செல்வகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments