அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் நவாஸ் கனி MP‌ ஆய்வு


அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் நவாஸ் கனி MP‌  ஆய்வு செய்தார்.

இது குறித்து நவாஸ் கனி MP‌  அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் 

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட  அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டேன்.

மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்படுகிறதா, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காப்பீட்டு திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும், மருத்துவமனை மருத்துவர்களிடமும் கேட்டறிந்தேன்.
தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும் அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை கட்டமைப்பு வசதிகள் தரம் உயர்த்தப்பட தமிழ்நாடு அரசின் சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் பணிகள் துவங்கப்பட்டு முடிக்கப்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இந்நிகழ்வில் அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் திரு ஆர் ஆனந்த், நகர் மன்ற துணைத் தலைவர் திரு முத்து உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அசரப் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments