புதுக்கோட்டை வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலி - சென்னை தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதுக்கோட்டை வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலி - சென்னை தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

கேரள மாநிலம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06044) வருகிற 25-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து நண்பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், தாம்பரம்-கொச்சுவேலி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06043) வருகிற 26-ந் தேதி தாம்பரத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையம் சென்றடைகிறது. 

இந்த ரெயில் 16 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை வழியாக தீபாவளி சிறப்பு ரயில்!

வரும் 25/10/22 அன்று( தீபாவளிக்கு மறுநாள்)
வண்டி எண்-06044
கொச்சுவெளி-தாம்பரம் சிறப்பு ரயில்!
➽கொச்சுவெளி-11:40 am புறப்படும்
➽திருவனந்தபுரம்-12:00 pm
➽புதுக்கோட்டை- 08:43/8:45 pm (செவ்) 
➽தாம்பரம் - 06:20 am காலை செல்லும்

வரும் 26/10/22 அன்று
வண்டி எண்-06043
தாம்பரம் - கொச்சுவெளி சிறப்பு ரயில்
➽தாம்பரம் - 10:30 am புறப்பட்டு
➽புதுக்கோட்டை- 06:23/06:25 pm (புதன்)
➽திருவனந்தபுரம் - 02:50 am
➽கொச்சுவெளி- 03:20 am காலை செல்லும்

இந்த சிறப்பு ரயிலுக்கு ஏற்கனவே முன்பதிவு தொடங்கிவிட்டது டிக்கெட் இருப்பின் விரைவாக முன்பதிவு செய்து கொள்ளவும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments