புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறதுபுதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பு தேடும் பெண்களுக்கு ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்ய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி மையத்தில் 28-ந் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பங்கேற்கும் பெண்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 முதல் 20 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாள் பயிற்சி வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த படித்த தகுதியுடைய விருப்பமுள்ள பெண்கள் தங்களது 10-ம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு கல்விச்சான்று, மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலை வாய்ப்பு இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments