வரும் 28ஆம் தேதி புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடக்கிறது

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடக்கிறது.

இதில், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த மாததுக்கான கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments