ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சொர்ணராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தாசில்தார் வில்லியம் மோசஸ், தனி தாசில்தார் சிவக்குமார், மணமேல்குடி தாசில்தார் ராஜா, அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மறவனேந்தல், சாத்தியடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டும். கோடிய கரையில் சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அதில் தேவையற்ற மரங்கள் அப்புறப்படுத்தி தேவையான மரங்களை நட வேண்டும். அறந்தாங்கி சர்க்கரை ஆலை அருகே உள்ள 100 ஏக்கர் பரப்பில் உள்ள தைல மர காடுகள் அப்புறப்படுத்தி மழை தரும் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். இரும்பாநாடு கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடிய வாரியை தூர்வார வேண்டும். 

ஒக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்குவதால் மாணவர்கள் படிக்க முடியவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். 2 கோழி பண்ணைகள் அனுமதி பெறாமல் வைத்துள்ளதாகவும், அதனால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறினர். கூட்டத்தில், அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments