மணமேல்குடி ஒன்றியத்தில் பிரதாபிராமன் பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பிரதாபி இராமன் பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு.செழியன் அவர்கள் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஜாகிர் உசேன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். 

இக் கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் 
திரு செழியன்  அவர்கள் பேசியதாவது..,
 பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாமே முன்னின்று செய்து முடிப்போம் என்றும் அனைத்து பெற்றோர்களும் இணைந்து நிதியினை திரட்டி நமக்கு நாமே திட்டம் மூலம் பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து முடிக்கலாம் என்றும் உறுதி அளித்தார்கள்.

அதேபோல் பள்ளிக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்தி மாணவர்கள் 
கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கும்  பெற்றோர்களிடத்தில் உறுதி கூறினார்கள்.

இக்கூட்டத்தில் பள்ளியின் ஆசிரியர்கள் மலர்கொடி கிருஷ்ணவேணி வாசுகி கோமதி ஆஸ்மா தமிழரசி மற்றும் அனைத்து பெற்றோர்கள்
 குழு உறுப்பினர்கள் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments