கோட்டைப்பட்டிணம் , அம்மாபட்டிணத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி M.P., அவர்களின் மக்கள் சந்திப்பு...
கோட்டைப்பட்டிணம் , அம்மாபட்டிணத்தில்     இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி M.P., அவர்கள் மக்களை சந்தித்தார்கள் 
 
கோட்டைப்பட்டினம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவர் காலனியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அதை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்தார். மீனவர் காலணியின்  நீண்ட கால கோரிக்கைகளான
மீனவர் காலனி மஸ்ஜிதுல் காதிரிய்யா பள்ளிவாசல்  மையவாடிக்கு  சுற்றுச்சுவர் வஃக்ப் வாரியத்தின் மூலமாக பெற்று தர உறுதியளித்தார்.
அடுத்ததாக மீனவர் காலனியின் பொது  மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே இருந்த இடத்தில் பயணியர் நிழற்குடையை அமைத்து தர உறுதியளித்தார் 
மற்றும் மீனவர் காலனியின் கடற்கரைப் பகுதியில் நாட்டு படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க  மீன்வளத் துறையின் சார்பாக கால்வாய் அமைத்து தர உறுதியளித்தார்.

அம்மாப்பட்டினம்

அதனை தொடர்ந்து அம்மாப்பட்டினம் சென்று தெற்குத் தெரு ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ உரை நிகழ்த்தி அம்மாப்பட்டினம் பொது மக்களின் கோரிக்கையான 150மீட்டருக்கான பேவர் ப்ளாக்  ரோடு மற்றும் உயர்மின்கோபுரம் விளக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து  தருவதாக உறுதியளித்தார்.

அண்ணன் கே. நவாஸ் கனி M.P. அவர்களின் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட தலைவர் முனைவர் ஹாஜி S.A.முகம்மது அஷ்ரப் அலி அவர்களும்,மாவட்ட துணைதத்லைவர் ஹாபில் S.சாதிக் அலி ஹஜ்ரத் அவர்களும், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் A.ரிபாய்தீன் அவர்களும்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கோட்டை MLA N. முஹம்மது அபுபக்கர் அவர்களும், கோட்டைப்பட்டினம் நகரச் செயளாலர் S.சல்மான் பாரீஸ் அவர்களும்,குறுவாடி அன்சாரி அவர்களும் கராத்தே S.நெய்னா முகம்மது அவர்களும்,சேக் ,AKR சாகுல் ஹமீது, முஹம்மது யூசுப் ஷாபி
தயார் சுல்தான், நசுருதீன், புகாரி, அபுபக்கர்,தாஜுதீன்,அம்ஜத்,இம்ரான் கான், பிச்சை முகமது, ஜகுபர் சாதிக், பைசல் ரஹ்மான் மற்றும்  தாய் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments