கிருஷ்ணாஜிப்பட்டிணததில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்




கிருஷ்ணாஜிப்பட்டிணததில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்  (28.10.2022) கிருஷ்ணாஜிப்பட்டிணததில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளரும் வர்த்தகர் அணியின் மாநில செயலாளருமாகிய S.A.M.அரபாத் அவர்கள் வரவேற்புரை ஆற்றி தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் தப்ரே ஆலம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பானாவயல் வெள்ளாற்றில் அரசு அனுமதித்ததை விட அதிக அளவில் மணல் அள்ளப் படுகின்றது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு கடல் நீர் ஊடுறவும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மணல்மேல்குடி ECR சாலை பகுதிகளில் அதிகளவில் மாடுகள் நடமாடுகின்றன இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக அறந்தாங்கி தெற்கு தொகுதி தலைவர் மைதீன் (எ) செல்லாத்தா நன்றியுரை ஆற்ற கூட்டம் நிறைவுபெற்றது.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments