முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு




திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்நிலையம் மற்றும் இவ்வழித்தடத்தில் உள்ள ரயில் பாதை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவானது. 

இவ்வழியாக உள்ள திருவாரூரிலிருந்து முத்துப்பேட்டைவழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில்பாதை யில் முத்துப்பேட்டை வழி யாக திருவாரூர் - காரைக்குடி பாசஞ்சர் ரயில் அதேபோல் சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்று வந்தன. அனைத்து ரயில்களும் முத்துப்பேட்டையில் நின்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சென்று வந்தன. மேலும் எதிரே வரும் ரயிலுக்கு வழிவிட மற்றொரு ரயில் பாதை மற்றும் பல்வேறு வசதிகள் இருந்து வந்தன. 

இதில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி அருகே உள்ள கிராம மக்களும் பிரசித்தி பெற்ற ஜாம்புவானோடை தர்கா யாத்திரையினரும் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். அதனால் இந்த ரயில் நிலையத்தில் அதி களவில் பயணிகள் வந்து சென்றதால் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அதி அபெனியார்கள் இங்கு பணியாறறி வந்தனர், அவர்களுக்கு தனி 
வசதி மற்றும் பல்வேறு வசதிகள் இருந்து வந்த நிலை யில் இந்த மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டு இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட் டது. அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிர மாகநடந்து வந்தன. இதில் முத்துப்பேட்டை ரயில் நிலையமும் புதியதாக கட்டப்பட்டது. அதன்பின்னர் பணிகள் ஆமை வேகத்தில் நடைப்பெற்றதால் மக்கள் போராட்டங்களை முன் னெடுத்து நடத்தியதால் துரிதப்படுத்தப்பட்டு 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டெமு ரயில் சேவை யாக தொடங்கப்பட்டது. ஆனால் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் முன்பு இருந்த அனைத்து வசதி களும் ரத்து செய்யப்பட்டு
ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பணியாளர்கள் இல் லாத ஒரு ரயில்நிலையமாக மாறியது.

அதன்பின்னர் இரண்டு 2020ம் ஆண்டுகொரோனா காரணமாகரயில் தாக்கம் சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையின்  காரணமாக மீண்டும் திருவாரூர் காலரக்குடியை ரயில்பாதை தடத்தில் திருவாரூர் காரைக்குடி பாசஞ்சர் ரயில் காலை யும் மாலையும் இயங்கி வருகிறது. அதுமட்டு மின்றி வாரம் ஒருமுறை செகந்திராபாத்திலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் மறுநாள் ராமேஸ்வரத்தி லிருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. ஆனால் இந்த முத்துப்பேட்டை ரயில்நிலையத்தில் காரைக் குடி திருவாரூர் மார்க்கத் தில் செல்லும் ரயில் மட் டுமே நின்று வருகிறது. ஆனால் தொலைதூரத் திற்கு செல்லும் ரயில்கள் நிற்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தொலை தூரத்திற்கு இப்பகுதியில் ரயில் சென்றும் நாம் பயன்படுத்த முடியவில் லையே என்று கவலைய டைந்துள்ளனர்.இதற்காக பல்வேறு போராட்டங் களை இப்பகுதி மக்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்திற்கு வந்த தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அபேகுமார் ராய், திருச்சி ரயில்வே கோட்டமேலாளர் மணிஸ் அகர்வால் ஆகியோரிடம் தமிழ் இலக்கிய மன்ற கவு ரவ தலைவர் ராஜ்மோ கன், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் முகமது அலி, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சுல்தான் இபுராஹீம், வர்த்தகக் கழக தலைவர் கண்ணன் ஆகி யோர் நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். இதில் சிறப்புகள் வாய்ந்த முத்துப் பேட்டை ரயில் நிலையத் தில் தொலைதூரத்திற்கு செல்லும் ரயில்கள் நின்று செல்லாதது மிகவும் வருத்த மும் கவலையாகவும் உள்ளது. 








ஆகவே முத்துப் பேட்டை பகுதி மக்கள் நலன் கருதி அனைத்து ரயில்களும் நின்று பயணி களை ஏற்றியும் இறக்கியும் செல்லும் வசதிகளையும், அதேபோல் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் போதிய பணியாளர்களை நியம னம் செய்தும் முன்பதிவு உட்பட அனைத்து வசதிக ளையும் செய்து தரவேண் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments