திருச்சிக்கு வரும் புவனேஷ்வர் - ராமேஸ்வரம் ரயில் நேரம் மாற்றம்... அதிகாரிகள் தகவல்திருச்சிக்கு வரும் புவனேஷ்வர்-ராமேஸ்வரம் ரயில் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 20896 ) புவனேஷ்வர் - ராமேசுவரம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்நிலையில், இந்த ரயில் ஆனது வரும் 4ம் தேதி முதல் ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு வந்து 4.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

வண்டி எண் 20896 புவனேஸ்வர் - இராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் திருச்சி வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 12.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் சனிக்கிழமை மாலை 04.15 மணிக்கு திருச்சி ரயில்நிலையம் வந்து 04.25 மணிக்கு புறப்பட்டு இராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை இரவு 10.40 மணிக்கு சென்றடையும்.

இந்த தகவலை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


நன்றி : சிவபிரகாஷ் ரயில்வே அப்டேட்ஸ் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments