ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி!ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (18-10-2022) தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமையேற்றார். ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி அப்துல் ரகுமான் மற்றும்  பணியாளர்கள் விபத்தில்லாமல் வெடிகள் வெடிப்பது, எண்ணையினால் பற்றிய தீயை எவ்வாறு அணைப்பது, விபத்து ஏற்பட்டவரை எவ்வாறு தூக்கி செல்வது போன்றவற்றை நடித்துக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்நிகழ்வில் உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்பட அனைத்து ஆசிரியர்களும்,‌மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments