KSR பெங்களூர் சிட்டி - மைசூர் சிட்டி இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என ரயில்வே பெயர் மாற்றம் செய்துள்ளது.
திப்பு எக்ஸ்பிரஸின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்ற வேண்டுமென்று மைசூரு எம்.பி பிரதாப் சிம்ஹா, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு சில மாதங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, இதற்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டது. இந்த ரயிலின் பெயர் மாற்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எம்.பி சிம்ஹா தனது கடிதத்தில், அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் ரயில்வேயின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு உடையார்களின் பங்களிப்பை போற்றவேண்டும் எடுத்துரைத்தார்.
இதேபோல், தல்குப்பா-மைசூரு எக்ஸ்பிரஸ், சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் பிறந்த கவிஞரின் நினைவாக குவெம்பு எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. தல்குப்பா விரைவு ரயிலுக்கு குவெம்பு பெயரை மாற்றுவதில் எந்த சர்ச்சையும் இல்லாத நிலையில், திப்பு எக்ஸ்பிரஸ் பெயரை மாற்றியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இது முஸ்லிம் ஆட்சியாளர்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைக்க பாஜகவின் பெயரை மாற்றும் நடவடிக்கையின் தொடர்ச்சி என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மாநிலத்தில் ரயில் இணைப்பை விரிவாக்க மைசூரு உடையார்கள் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. எனவே பழைய ரயிலின் பெயரை மாற்றாமல், புதிய ரயிலுக்கு அவர்களின் பெயரை சூட்டி ரயில்வேத்துறை கவுரவித்திருக்கலாம் எனவும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 15, 1980 அன்று மைசூரு மற்றும் பெங்களூருவை இணைக்கும் அதிவிரைவு ரயில் சேவையை திப்பு எக்ஸ்பிரஸ் தொடங்கியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.