10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் தனித்தோ்வா்கள் கவனத்திற்கு!எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு (ஏப்ரல் 2023) எழுதவுள்ள தனித்தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு வரும் நவம்பா் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத்தோ்வுகள் உதவி இயக்குநா் அ.பிச்சைமுத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

அறிவியல் பாட செய்முறை பயிற்சிவகுப்பில் சேர தங்களது பெயா்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் நவம்பா் 25 வெள்ளிக்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும். அந்த ஒப்புகை சீட்டினைப் பெற்று பின்னா், கருத்தியல் தோ்வுக்கான விண்ணப்ப அழைப்புவிடுக்கும்போது, இணையவழியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அப்போது சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தோ்வுக் கூட அனுமதி சீட்டைப் பதிவிறக்கம் செய்ய இயலும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments