கிழக்கு கடற்கரை சாலை கட்டுமாவடி மேலஸ்தானம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு!கிழக்கு கடற்கரை சாலை கட்டுமாவடி மேலஸ்தானம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த சேமங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 35). இவர் நேற்று மாலை கட்டுமாவடியில் இருந்து சேமங்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலஸ்தானம் அருகில் பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments