மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பெல்ட் தகுதி தேர்வு!மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பெல்ட் தகுதி தேர்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த நான்கு மாதங்களாக கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நேற்று கராத்தே பெல்ட் தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்த கராத்தே தலைமை பயிற்சியாளரின் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், மஞ்சள் நிற பெல்ட்களையும் வழங்கி பாராட்டினார்கள். 
இத்தேர்வில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடிய அனைத்து மாணவ-மாணவியருக்கும் சிறப்பான பயிற்சியளித்த ஹரி அவர்களுக்கும் பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தகவல்: வாசிம் கான் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments