இனி விமானப் பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை... தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு




விமானப் பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இருமல்,காய்ச்சல்,தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் பொது சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments