மணமேல்குடி ஒன்றியத்தில் கலைத் திருவிழா உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மணமேல்குடி ஒன்றியத்தில் கலைத் திருவிழா உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மணமேல்குடி வட்டார வளமயத்தில் மணமேல்குடி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி இருவரும் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் இன்று (29-11-2022) நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவினை சிறப்பாக நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலைத் திருவிழாவில் கலந்து கொள்ளும் நடுவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் கலைத் திருவிழா ஒருங்கிணைப்பு குழு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments