கறம்பக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி




கறம்பக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக...

கறம்பக்குடி அருகே மேல சவேரியார் பட்டினத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் மனைவி சகாயமேரி (வயது 42). இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு மழையூர் வெள்ளாள விடுதி பகுதியை சேர்ந்த அமரேசன் என்பவர், அவர் இலுப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும் தன்னிடம் ரூ.3½ லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பிய சகாயமேரி அவரிடம் ரூ.3½ லட்சத்தை கொடுத்தார். இருப்பினும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அவர் அமரேசனிடம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. வேலை வாங்கி கொடுக்காததால் தான் அளித்த பணத்தை திருப்பி தரும்படி சகாயமேரி பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பணத்தை கேட்ட சகாயமேரியை, அமரேசன் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சகாயமேரி கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், அமரேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments