புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல்லுக்கு பயிா்க் காப்பீடு செய்ய நவ.15 கடைசி!புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல்லுக்கு பிரிமீய தொகையாக ஏக்கருக்கு ரூ. 488.05 செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ள நவ. 15 கடைசி நாளாகும்.

இதனால் விவசாயிகள் நலன் கருதி வரும் நவ. 12, 13 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், பொது சேவை மையங்களிலும் பயிா்க் காப்பீடு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ உடனடியாக பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments