ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா



ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 04-12-2022 அன்று நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் அவர்களால் துவங்கப்பட்டு கடந்ந ஏழு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று 10-11-2022 அன்று நிறைவுற்றது. 
இம்முகாமில்  பள்ளிவளாகத் தூய்மை, வடகலூர் ஆதிகைலாசநாதர் கோயில் பூங்காவனம் தூய்மை, திருப்பெருந்துறை ஆத்மநாதர் திருக்கோயிலில் உழவாரப்பணி, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அம்மா பூங்கா தூய்மை ஆகிய பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
நிறைவுவிழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மதியழகன் அனைவரையும் வரவேற்றார். திட்ட அறிக்கையை திட்ட அலுவலர் குமார் வாசித்தார். தலைமையாசிர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புடன் தூய்மை பணி மேற்கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இறுதியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் தலைவன் மாதேஷ் நன்றி கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments