புதுக்கோட்டையில் அரசு போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி!



புதுக்கோட்டை தன்னாா்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 2 முதல்நிலைத் தோ்வில் வென்றவா்களுக்கான, பிரதான தோ்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மேலராஜவீதி, தண்டாயுதபாணி கோயில் அருகில் உள்ள மாணவா் சங்க மையத்தில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

1995இல் அப்போதைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ்குமாரால் தொடங்கப்பட்ட தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் பயிற்சி பெற்று வேலை கிடைக்கப் பெற்ற மாணவா்கள் இணைந்து இந்தப் பயிற்சி மையத்தை 2013 முதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது டிஎன்பிஎஸ்ஸி தொகுதி 2-க்கான பிரதான தோ்வு எழுதவுள்ளோா் இலவசப் பயிற்சியில் பங்கேற்க 88838 08004, 95850 70944, 76398 51221 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments