ஊராட்சி சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.161 கோடியே 34½ லட்சத்துக்கு நிர்வாக அனுமதி! தமிழக அரசு உத்தரவு!!ஊராட்சி சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ. 161 கோடியே 34½ லட்சத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக சட்டசபையில் 27.8.2021 அன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 10 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட இதர சாலைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக 2 ஆயிரம் கி.மீ. நீளச் சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை தலைமை என்ஜினீயர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) கடிதம் எழுதி, 2 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள 873 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.2,178 கோடி செலவில் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நிர்வாக ஒப்புதல் வேண்டும் என்று கடிதம் எழுதினார்.
அவரது கருத்துருவை ஏற்று, அதற்கான நிர்வாக அனுமதியை அளித்து அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 147.400 கிலோ மீட்டர் சாலைகள் ரூ.161 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்தில் தரை தளம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் மின்னாத்தூர்- ராமுடையான்பட்டி சாலை ரூ.160 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலும், தஞ்சாவூர்-மானமதுரை முதல் புன்குளம்-கொத்தம்பட்டி சாலை ரூ.378 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலும், முதுகுளம் முதல் புதுநகர் சாலை ரூ.318 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலும், திருக்காட்டுப்பள்ளி செங்கிப்பட்டி-பட்டுக்கோட்டை சாலை முதல் மெய்குடிப்பட்டி சாலை ரூ.212 லட்சத்து 6 ஆயிரத்திலும், அண்டக்குளம் முதல் பெரியதம்பி உடையான்பட்டி சாலை ரூ.337 லட்சத்து 55 ஆயிரத்திலும் தரை தளம் உயர்த்துதல்.

விராலிமலை
விராலிமலை தொகுதியில், புதுக்கோட்டை -திருச்சி சாலை முதல் அத்தினிபட்டி வழி கோப்பிலிக்காடு சாலை ரூ.411 லட்சத்து 35 ஆயிரத்திலும், நார்த்தாமலை-அத்தினிபட்டி சாலை ரூ.84 லட்சத்து 61 ஆயிரத்திலும், நார்த்தாமலை-மணியாடிப்பட்டி சாலை ரூ.266 லட்சத்து 49 ஆயிரத்திலும் தரை தளம் உயர்த்துதல்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை தொகுதியில் பி.எம்.சாலை முதல் பெருங்கொண்டான் விடுதி சாலை ரூ.179 லட்சத்து 36 ஆயிரத்திலும், வடவாளம்-புதுப்பட்டி சாலை-தெற்கு செட்டியாப்பட்டி-மணிபள்ளம் சாலை ரூ.367 லட்சத்து 82 ஆயிரத்திலும், கோட்டைகாடு-மரவன்பட்டி (வழி) கருப்பகோன்தெரு சாலை ரூ.270 லட்சத்து 61 ஆயிரத்திலும், மாங்கோட்டை களபம் சாலை முதல் எஸ்.களபம் சாலை ரூ.181 லட்சத்து 18 ஆயிரத்திலும், கணபதிபுரம் வண்ணாரப்பட்டி வடக்கு தொன்டைமான் ஊரணி சாலை ரூ.278 லட்சத்து 20 ஆயிரத்திலும், புத்தாம்பூர்-ராயவயல் சாலை ரூ.267 லட்சத்து 12 ஆயிரத்திலும் தரை தளம் உயர்த்துதல்.

திருமயம்
திருமயம் தொகுதியில், மலைக்குடிபட்டி-மாவூர் சாலை ரூ.182 லட்சத்து 28 ஆயிரத்திலும், வந்தவாசி சாலை ரூ.189 லட்சத்து 79 ஆயிரத்திலும், அரிமளம் திருமயம் சாலை முதல் செங்கை விடுதி சாலை ரூ.157 லட்சத்திலும், அற்புதாபுரம்-கோட்டையூர் சாலை முதல் புதுப்பட்டி வழி தேவப்பட்டி சாலை ரூ.150 லட்சத்து 13 ஆயிரத்திலும், அற்புதா புரம்-கோட்டையூர் சாலை முதல் தச்சம்பட்டி சாலை ரூ.180 லட்சத்து 26 ஆயிரத்திலும், ராங்கியம்-குருவிகொண்டான் பட்டி சாலை முதல் பாண்டானி சாலை ரூ.266 லட்சத்து 83 ஆயிரத்திலும், ராங்கியம்-குருவி கொண்டான் சாலை முதல் எரானிபட்டி சாலை ரூ.107 லட்சத்து 38 ஆயிரத்திலும், ராங்கியம்-குருவி கொண்டான் சாலை முதல் தெற்கு புதுவயல் சாலை ரூ.265 லட்சத்து 14 ஆயிரத்திலும், ராங்கியம்- கண்ணனூர் சாலை ரூ.250 லட்சத்து 94 ஆயிரத்திலும், குழிப்பிறை- ஆத்தூர் சாலை ரூ.395 லட்சத்து 69 ஆயிரத்திலும், பெருமாநாடு-கொன்னையூர் சாலை முதல் கோவனூர் சாலை வழி வையாபுரி சாலை ரூ.427 லட்சத்து 56 ஆயிரத்திலும், மேலதானியம்- அம்மாபட்டி சாலை ரூ.251 லட்சத்து 53 ஆயிரத்திலும், செவலூர்-மலையடிப்பட்டி சாலை ரூ.309 லட்சத்திலும், பொன்னமராவதி-திருக்களம்பூர் சாலை முதல் தெக்கூர் சாலை ரூ.285 லட்சத்து 91 ஆயிரத்திலும், பொன்னமராவதி-வேந்தன்பட்டி- திருக்களம்பூர் சாலை முதல் கருத்தகூடன்பட்டி சாலை வழி கருப்பக்குடி பட்டி சாலை ரூ.271 லட்சத்து 65 ஆயிரத்திலும், நல்லூர் முதல் பாலப்பட்டி சாலை நெருஞ்சிக்குடி சந்திப்பு ரூ.349 லட்சத்து 72 ஆயிரத்திலும், பெருமாநாடு கொன்னையூர் சாலை முதல் நல்லூர் சாலை ரூ.199 லட்சத்து 68 ஆயிரத்திலும், நல்லூர் முதல் மேமனப்பட்டி சாலை ரூ.293 லட்சத்து 3 ஆயிரத்திலும் தரை தளம் உயர்த்துதல்.

ஆலங்குடி
ஆலங்குடி தொகுதியில் கருவாங்குடி இருப்பு வெள்ள கொள்ளை சாலை பிரிந்து ஆலங்குடி மரமடக்கி சாலை (வழி) தெற்கு ஆரியபட்டி சாலை ரூ.343 லட்சத்து 77 ஆயிரத்திலும், வெங்கடகுளம்-வெள்ள கொள்ளை வழி புதுக்காடு சாலை ரூ.429 லட்சத்து 66 ஆயிரத்திலும், பனன்குளம் வடக்கு அய்யனார்கோவில் முதல் பெருங்கரையாடி மீண்ட அய்யனார்கோவில் வழி வில்லூரணி ஆறு ரூ.275 லட்சத்து 31 ஆயிரத்திலும், சிரியலூர்-இனாம் குடியிருப்பு சாலை ரூ.286 லட்சத்து 89 ஆயிரத்திலும், பல்வேறு சாலைகள் தரை தளம் உயர்த்துதல்.

அறந்தாங்கி
அறந்தாங்கி தொகுதியில் நிலையூர்-சிறுவரை பால அணுகு சாலை ரூ.99 லட்சத்து 59 ஆயிரத்திலும், தினையாக்குடி சாலை ரூ.254 லட்சத்து, 75 ஆயிரத்திலும், சிலத்தனி-ரெண்டனி-உக்கடை சாலை ரூ.375 லட்சத்து 74 ஆயிரத்திலும், ஏம்பல்-ஓக்கூர் முதல் இரும்பநாடு (வழி) நல்லிக்குடி சாலை ரூ.506 லட்சத்து 2 ஆயிரத்திலும், அன்புகோட்டை-மறவன்வயல் சாலை ரூ.379 லட்சத்து 78 ஆயிரத்திலும், கோடியக்கரை சாலை ரூ.455 லட்சத்து 65 ஆயிரத்திலும், கரகத்திக்கோட்டை-நாடார் குடியிருப்புச்சாலை ரூ.499 லட்சத்து 58 ஆயிரத்திலும், சாலியம் சாலை ரூ.395 லட்சத்து 37 ஆயிரத்திலும், பட்டமுடையான்-செல்லப்பன்கோட்டை சாலை ரூ.345 லட்சத்து 44 ஆயிரத்திலும் மற்றும் பல்வேறு சாலைகள் தரை தளம் உயர்த்துதல்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments