மீமிசல் அருகே சிறுகடவாக்கோட்டையில் ஆபத்தான பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!சிறுகடவாக்கோட்டையில் ஆபத்தான பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மீமிசல் அருகில் உள்ள பொன்னமங்கலம் ஊராட்சி சிறுகடவாக்கோட்டையில் ஆபத்தான நிலையில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான அரசினர் தொடக்கப்பள்ளி கட்டிடம் பாலடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் தொடர்ந்து ஆங்காங்கு சுவர்கள் இடிந்து விழுந்து கொண்டே உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அதே இடத்தில் இருந்த மற்றொரு பழைய கட்டிடமான அரசினர் துணை ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று இருந்தது அந்த கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருந்தால் தற்போது புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடத்தை இடிக்க ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருக்கும் போது அந்த கட்டிடத்தில் இருந்து பக்கத்து வீட்டிற்கு மின்சார வயர்கள் இணைக்கப்பட்டுள்ளது அந்த மின்சார வயர்களை மின்சார வாரியத் துறையினர் அகற்றினால் தான் அந்த கட்டிடத்தை இடிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. அதன் அருகாமையில் தற்போது புதிய பள்ளி கட்டிடம் இயங்குகின்றது. 

இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அந்த குழந்தைகள் விளையாட செல்லும் பொழுது அதன் அருகாமையில் இடிந்து விழுந்து நிலையில் உள்ள பழைய அரசு பள்ளி கட்டிடமும், பழைய அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையமும் கற்கள் கீழே விழுந்து கொண்டு உள்ளது. அந்தப் பள்ளிக்கும் சுகாதார நிலையத்திற்கும் இடையில் தான் மாணவ மாணவிகளின் கழிப்பறை உள்ளது. அந்த கழிப்பறைக்கு குழந்தைகள் செல்லக்கூடாது என ஆசிரியர்கள் கழிவறைக்கு பூட்டு போட்டு உள்ளே செல்லாதவாறு முள்வேலியும் அமைத்துள்ளனர். அதனால் பள்ளி குழந்தைகள் அருகாமையில் உள்ள கருவேல மரங்களை நோக்கித்தான் செல்கிறார்கள். 
சுவர்கள் இடிந்து விழுந்து குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் முன்பு பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments