பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள காரைக்குடி - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் அறிவிக்கப்படுமா? தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு


கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும். என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சுமார் 3852 கி.மீ. அளவில் இருப்புபாதை வழித்த டங்கள் உள்ளன. தமிழக மக்கள் தொகை மற்றும் பரப்பளவுவை ஒப்பி டும் போது இது குறைவு ஆகும். தமிழகம் அகில இந்திய அளவில் வளர்ச் சியில் இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும். ரயில்வே வளர்ச்சியில் உத்திரபிரதேசம், பஞ் சாப், ஹரியானா, பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை விட முன்னணியில் உள் ளன. தமிழகம், ஒன்றிய அரசுக்கு செலுத்தும் வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளது. வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளதை போன்று ரயில் அடர்த் தியிலும் இரண்டாம் இடத்துக்கு வரவேண் டும். இதற்கு குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒரு புதிய இருப்புபாதை திட் டத்தையாவது செயல்ப டுத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகம் வளாச்சி பாதையில் செல்லும்.

தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை. தொழில் வளர்ச்சி இல்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலை வாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்க ணக்கில் தென்மாவட் டத்தைச் சேர்ந்த மக்கள்
சென்னை, பெங்களூர், 'மும்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் - மானாம துரை. திருநெல்வேலி - திருவனந்தபுரம் பாதை 5 தவிர மற்ற - அனைத்து மாவட் டங்களில் உள்ள ரயில் பாதைகள் ஆங்கிலேயர் காலத்திலே அமைக்கப்பட் டது ஆகும். 

திருநெல்வேலி - நாகர்கோவில் 74 கி.மீ புதிய அகல ரயில்  8-4-1981 தேதியும், 

கன்  னியாகுமரி திருவனந்தபுரம் 87 கி.மீ புதிய அகலரயில் பாதை 15-4-1979 அன்றும் 

விருதுநகர் அருப்புகோட்டை பாதை 1-9- 1963 அன்றும், 
 
அருப்புகோட்டை‌ - மானாமதுரை பாதை
2-5-1964 அன்றும் பய ணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. 

இந்த நிலையில் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்கள் வேண்டும். என்று பல ஆண்டுகளாக தென் மாவட்ட மக்கள் போராடி வருகிறார்கள். குறிப்பாக ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகும-ரிக்கு புதிதாக இருப்பு பாதை அமைக்கப்படு
1991-ம் ஆண்டு, அப்போதைய ராமநாத புரம் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வ ரன் கேள்வி எழுப்பி னார். இந்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் இவ்வாறு எந்த ஒரு திட்டமும் இல்லை என்று பதிலளித்துள்ளார். 

இதைப்போல் புதுக்கோட்டை பாரா ளுமன்ற உறுப்பினராக இருந்த திருநாவுக்கரசர் அறந்தாங்கியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க பாராளுமன்றத்தில் 24- 2-2000 அன்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற் கும் இவ்வாறு எந்த ஒரு திட்டமும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் பதி லில் குறிப்பிட்டுள்ளார். 

கன்னியாகுமரியில ருந்து தொடங்கி கூடங் குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர் வாடி, கீழக்கரை, ராம நாதபுரம் வழியாக காரைக்குடி புதிய ரயில்வே இருப்பு பாதை தட அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறி விக்கப்பட்டது. 

கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்புபாதை அமைக்க தொடக்கநிலை பொறி யியல் மற்றும் போக்குவ ரத்து ஆய்வுபணி 2013-14- ம் ஆண்டு நிறைவு பெற்று முடிவடைந்து திட்ட மதிப்பீடை ரயில்வே வாரி யத்துக்கு தெற்குரயில்வே சமர்பித்துவிட்டது. இந்த ஆய்வுப்பணி இரண்டு பிரிவுகளாக நடந்தது.

முதல் பிரிவு, காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வு பணி. நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் 214.81 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்க 879 கோடி ரூபாய் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. 

இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம், கீழகரை, ஏர்வாடி, சாயல்குடி, சூரங்குடி.  வழியாக தூத்துக்குடிக்கு சர்வே செய்யப் பட்டது.

இரண்டாவது பிரிவு. கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க நடைபெற்ற ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ தூரத்துக்கு ரயில்பாதை அமைக்க ரூ.1,080 கோடி கள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டணம், திசையன்விளை, நாவலடி, கூடங்குளம், மகாராஜபுரம், பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும்,

மொத்த ரயில் நிலை யங்கள்:- காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் ன திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை சேர்த்து 462.47 கி.மீ தூரத்தில் ரூ.1965,763 கோடிதிட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டள்ளது.

பொதுவாக ரயில்வே வாரியம் மற்றும் திட்ட குழு ஒரு புதிய ரயில்வே இருப்புபாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு அந்த திட்டம் பொருளாதார அள வில் ஆண்டுக்கு எவ்வ ளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டுதிட் டத்தை அறிவிப்பார்கள். இதற்கு ரேட் ஆப் ரிட் டன் என்று கூறுவார்கள். இந்த கிழக்கு கடற்கரை பாதை ரயில்வே திட்டம் துறைமுகம், மின்திட்டங் கள். சரக்கு போக்குவ
ரத்து, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா. இந்த பகுதியில் உள்ள தொழில்சாலைகள் என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வரு மானங்களை கணக்கில் கொண்டு இந்த டேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய் யப்படும்.

ரேட் ஆப் ரிட்டன் குறைவாக உள்ள கார ணத்தால் இந்த திட் டத்தை நடைமுறைப்ப டுத்த ரயில்வே வாரியம் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இந்த வழி தடத்தில் சுற்றுலா மற் றும் பல்வேறு ஆன்மீக தலங்கள் உள்ளன. இந்த தடம் அமைக்கப்படும் பட்சத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு மிக வும் வசதியாக அமையும். இந்த வழி தடத்தில் கூடங்குளம், உடன்குடி போன்ற பகுதிகளில் பல கோடி முதலீட்டுடன் கூடிய புதிய மின் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றபட்டால் கடலோர மாவட்டங்கள் அதிகமாக பயன்பெறும். இந்த திட்டம் வறண்ட மாவட்டமான ராமநாத புரம் மாவட்டத்துக்கு மிகவும் வரபிரசாதமாக அமையும். இந்த திட்டத்தை உடனடியாக நிறை வேற்ற தென்தமிழக எம்.பிக்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என தமிழக மக்கள் எதிர் பார்க்கின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் ஞான திரவியம் எம்.பி. ரயில்வே துறைக்கு கடி தம் அனுப்பி உள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவ ரியில் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு உயிர் கொடுக்கப்படு மா? என்ற எதிர்பார்ப்பு தென் மாவட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள் ளது.

தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் குரல் கொடுக்க வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments