சிறுபான்மையின கைவினைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுபான்மையின கைவினைஞா்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் விரசாட் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு மேலும் கூறியது:

ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையினத்தைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்போா் ஆகியோருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

இக் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 90 சத பங்குத் தொகையும், டாம்கோ மூலம் 5 சத பங்குத் தொகையும், பயனடைவோா் பங்குத் தொகை 5 சதம் என பிரிக்கப்பட்டுள்ளது.

இக்கடன் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும்.

மேற்படி கடன் தொகையைப் பெற விண்ணப்பதாரா் மத வழி சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தவா், பாா்சீயா், ஜைனா் ஆகியோரில் ஒருவராகவும், 18 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.98 ஆயிரம், நகா்ப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.1. 20 லட்சம்.

கடனை 60 மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். வரும் நவ. 25க்குள் ஆட்சியரகக் கூடுதல் கட்டட முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments