தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தவர்களை தாக்கிய விவகாரம்:போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், டாக்டருக்கு அபராதம் விதிப்பு மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தவர்களை தாக்கிய விவகாரம்:போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், டாக்டருக்கு அபராதம் விதிப்பு மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு


அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, சுரேஷ்குமார், மனோகர், ராஜரத்தினம், மூக்கையா. இவர்கள் 5 பேரும் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் சில விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்துள்ளனர். 

அந்த மனு மீது உரிய தகவல் அளிக்காத அப்போதைய அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மனுதாரர்கள் 5 பேரையும் தாக்கி அவர்கள் மீது 18-8-2015 அன்று வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதலில் காயமடைந்த பழனிச்சாமி, ராஜரத்தினம் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அப்போது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் டாக்டர் ராயப்பன்குமார் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 5 பேரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இதை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன்மோகன்தாஸ், பாதிக்கப்பட்ட 5 பேருக்கும் இழப்பீடாக தலா ரூ.1 லட்சத்தை வரும் 11-ந்தேதிக்குள் அரசு வழங்க வேண்டும். 

இந்த இழப்பீட்டு தொகையில் அப்போது அன்னவாசல் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பால சுந்தரத்திடம் இருந்து ரூ.2 லட்சமும், சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் இருந்து ரூ.2 லட்சமும், டாக்டர் ராயப்பன் குமாரிடம் இருந்து ரூ.1லட்சமும் வசூலிக்கப்பட வேண்டும். மேலும் பாலசுந்தரம், சோமசுந்தரம், டாக்டர் ராயப்பன்குமார் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தற்போது மதுரை மாவட்டம் சமயநல்லுார் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments