கந்தா்வகோட்டையில் வீடு புகுந்து 17 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
கந்தா்வகோட்டையில் முறுக்கு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 17.5 பவுன் நகை, ரூ 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

கந்தா்வகோட்டை, ராஜகோபால் நகரில் வசிப்பவா் பெ. முருகேசன் ( 45), முறுக்கு வியாபாரி. இவா் வியாழக்கிழமை தனது மகளை மருத்துவப் பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இவா் வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் முருகேசன் வந்து பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 17.5 பவுன் நகை, ரூ. 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments