ஆலங்குடி அருகே போலி தங்க காசுகளை கொடுத்து தி.மு.க. நிர்வாகியிடம் பணம் பறிக்க முயற்சி கர்நாடக வாலிபர் கைது




ஆலங்குடி அருகே போலி தங்க காசுகளை கொடுத்து தி.மு.க. நிர்வாகியிடம் பணம் பறிக்க முயன்ற கர்நாடக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போலி தங்க காசு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மழவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அயூப்கான் (வயது 58). இவர் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு அமை ப்பாளரும், வர்த்தக சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரிடம் கர்நாடக மாநிலம் ஹரப்பநல்லி தாலுகா, எம்.கோரச்சரஹட்டி லிங்கப்பா மகன் விஜயகுமார் (23) என்பவர் கடந்த 2 மாதமாக செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் தங்க காசு இருப்பதாகவும், அவற்றை வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 19-ந் தேதி தி.மு.க. நிர்வாகியிடம், விஜயகுமார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்க காசை வாங்கி கொண்டு, பாதி பணம் கொடுத்தால் போதும் என்று ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். இந்நிலையில், தி.மு.க. நிர்வாகியின் கடைக்கு தங்க காசுடன் விஜயகுமார் வந்தார். பின்னர் அவற்றை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்று கூறினார். பின்னர் தங்க காசுகளை வாங்கி சோதனை செய்த போது, போலி தங்க காசு என்று தெரியவந்தது.

வாலிபர் கைது

இதுகுறித்து அவர் ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து 20 போலி தங்க காசுகளையும் பறிமுதல் செய்து, விஜயகுமாரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

இதுகுறித்து அயூப்கான் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் போலி தங்க காசுகளை தி.மு.க. நிர்வாகியிடம் கொடுத்து பணம் பறிக்க முயன்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments